வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று (18) காலை தீப்பற்றி எரிந்தது.

ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தினர். வீடு மற்றும் அதிலிருந்த பொருட்கள் தீயில் முற்றாக அழிந்தன.

குடும்பத் தகராறு காரணமாக வீட்டு உரிமையாளரே தீ வைத்ததாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, உரிமையாளரை கைதுசெய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார விஜயம் செய்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









