Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண் தனது வழக்கு ஒன்றிற்காக குறித்த அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில் தன்னிடம் இலஞ்சமாக பணம் கேட்கப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம் கடந்த மாதம் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய இன்று மாறுவேடத்தில் மருதமுனை பகுதியில் இயங்கி வந்த குவாஷி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில் அதிகாரிகள் காத்திருந்துள்ளனர்.

இதன்போது முறைப்பாட்டினை வழங்கிய அப்பெண் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியிடம் சென்று குறித்த இலஞ்ச பணத்தை தருவதாக கூறி ரூபா 300 யை நீதிபதியின் மனைவியிடம் வழங்கியுள்ளார்.

இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிபதி மற்றும் மனைவியை கைது செய்ததுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை சமாதான நீதிபதியுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா கடந்த 01.03.2023 ஆம் திகதியில் இருந்து செயற்படும் வண்ணம் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

காதி நீதிமன்றம் என்பது இஸ்லாமிய தனியார் சட்டத்தின் கீழ் திருமண, விவாகரத்து மற்றும் குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாகும். இலங்கையில், முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியாக காதி நீதிமன்றங்கள் உள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!
செய்திகள்

ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!

September 16, 2026
மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
Next Post
ட்ரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு; உக்ரைன் ஜனாதிபதி

ட்ரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு; உக்ரைன் ஜனாதிபதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு