Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களாக வர சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் அரசியல் நாடகமே இந்த ஹர்த்தால்; அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்

வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களாக வர சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் அரசியல் நாடகமே இந்த ஹர்த்தால்; அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்

1 year ago
in அரசியல், காணொளிகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வடகிழக்கில் நேற்று (18) தமிழரசு கட்சியினால் அறிவிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டதான ஹர்த்தாலின் பின்னணியில் சுமந்திரனை கிழக்கு மாகாண முதலமைச்சராக கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாகவும் சாணக்கியன் இதற்கு துணை போயுள்ளதாகவும் இவ்வாறான நிலையில் கடைகளை அடாவடியாக மூடும்படி மட்டு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் கூறியுள்ளதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர் சிவதர்சன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நேற்று அறிவிக்கப்பட்ட ஹார்த்தாலானது இந்த நேரத்தில் தேவையில்லாத ஒன்று என்பதுடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரின் அரசியல் சுய இலாபத்திற்க்காகவே இது முன்னெடுக்கப்பட்டதாகவே நாம் பார்க்கிறோம்.

ஒரு போதைபொருள் வியாபாரி இராணுவத்தினரால் அடித்து கொல்லப்பட்டட்டுள்ளார். அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நீதித்துறை இருக்கின்றது. இவர்கள் யார் அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க.

அப்படையென்றால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னாள் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவ்வாறு ஒரு சம்பவம் கிழக்கில் நடந்திருந்தும் அப்போது தமிழரசு கட்சி எங்கே போனது, ஜனாதிபதி சட்டத்தரணியாக இருந்த சுமந்திரன் இங்கே போனார்? ஏன் அப்போது இங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர் நீதியை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை, ஹார்த்தாலும் முன்னெடுக்கப்படவில்லை.

முந்தையங்கட்டில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டார் என்ற காரணத்திற்காக வடகிழக்கில் உள்ள இராணுவத்தை வெளியேறுங்கள் என்று சுமந்திரன் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நாட்டில் ஈஸ்டர் தாக்குதல் என்ற ஒரு கோர சம்பவம் நடந்தது. அந்தநேரத்தில் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி, நாட்டிற்கு பாதுகாப்பை வழங்கியவர்கள் அவர்கள். அவர்களை வெளியேறுங்கள் என்று சொல்லி அவர்கள் வெளியேறிவிட்டால் அது இனப்பிரச்சினையை தோற்றுவிக்க வாய்ப்புள்ளது.

எனவே சுமந்திரன் சார்ந்த தமிழரசு கட்சியினருக்கு போலி தேசியம் பேசி மக்களை ஏமாற்ற மட்டுமே தெரியும் என மேலும் தெரிவித்த சிவதர்சன் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள சாணக்கியனும் அரசியல் நாடகங்கள் மேற்கொள்ளவதாக சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
நிறுவனப் பராமரிப்பிலிருந்து சமூகமயமாகும் இளைஞர்களுக்கு வீட்டு உதவி

நிறுவனப் பராமரிப்பிலிருந்து சமூகமயமாகும் இளைஞர்களுக்கு வீட்டு உதவி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.