மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் அமைந்துள்ள ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று (20) ஆரம்பமாகிறது.
சில வருடங்களுக்கு முன்பு சிறிய ஆலயமாக காணப்பட்ட இவ்வாலயம், பின்னர் கிராம மக்களின் ஒற்றுமையால் புதிதாக கட்டமைக்கப்பட்டு, புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்திருந்த்தது.
அதன் பின்னர் நடைபெற்று முடிந்த எண்ணைக்காப்பு நிகழ்வின் பின் நடைபெறும் முதலாவது வருடாந்த திருவிழா இதுவாகும்.
மொத்தம் எட்டு நாட்களை கொண்ட இவ் விழாவில், மூன்றாம் நாளன்று இசை நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன. இறுதியாக எட்டாவது நாளில், (வரும் 27 ஆம் திகதி) தீர்த்தோற்சவத்துடன் திருவிழா நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.











