Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம்; மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தகவல்!

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம்; மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தகவல்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
Next Post
கைக் குழந்தையுடன் இளம்தாய் தற்கொலை!

கைக் குழந்தையுடன் இளம்தாய் தற்கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு