அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் பொரிபன்ஹா பகுதியிலுள்ள வீடோன்றில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் நேற்று (26) அவ் வீட்டுக்கு விசாரணைக்காக பொலிஸார் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு வீட்டுக்கு விசாரணைக்காக சென்றபோது அங்கிருந்த நபர் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதன் போது சம்பவ இடத்திலேயே இரண்டு பொலிஸார் உயிரிழந்துள்ள தோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இச் சம்பவத்தை செய்துவிட்டு தப்பியோடியவரை தேடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
மேலும் தப்பியோடிய நபர் ஏற்கனவே குற்ற வழக்கில் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








