Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முத்துஐயன்கட்டில் இளைஞன் உயிரிழப்பு வழக்கு; இராணுவ சிப்பாய்கள் கடும் நிபந்தனையுடன் பிணையில்

முத்துஐயன்கட்டில் இளைஞன் உயிரிழப்பு வழக்கு; இராணுவ சிப்பாய்கள் கடும் நிபந்தனையுடன் பிணையில்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 07.08.2025 அன்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் நால்வரை கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 19.08.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பாக ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகிய நிலையில், இராணுவ சிப்பாய் நால்வரும் நேற்று வரை (26) விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த வழக்கு நேற்று (26) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மூத்த சட்டத்தரணி கெங்காதரன், உயிரிழந்த பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இந்த வழக்கில் இராணுவ சிப்பாய்களுக்கான பிணைக் கோரிக்கை இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட நிலையில், கடும் நிபந்தனைகளின் பின்னர் குறித்த இராணுவ சிப்பாய்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொருவரும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சாட்சியங்களை அச்சறுத்தக்கூடாது என்றும் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்கள் செல்ல முடியாது என்றும் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு 30.09.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்
செய்திகள்

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்

July 14, 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!

July 14, 2026
நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; ஒரே நாளில் 1,279 பேர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; ஒரே நாளில் 1,279 பேர் பாதிப்பு!

July 14, 2026
பொலிஸ் அதிகாரிகளாக நடித்து பல கோடி கொள்ளை; 3 பேர் கைது
செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளாக நடித்து பல கோடி கொள்ளை; 3 பேர் கைது

July 14, 2026
பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!
செய்திகள்

பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

July 14, 2026
கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!
செய்திகள்

கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!

July 14, 2026
Next Post
யாழில் பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5 ஆயிரம் தண்டம்

யாழில் பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5 ஆயிரம் தண்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு