அமெரிக்காவில் AI தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் படி ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த குறித்த நபர் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்ஜிபிடியுன் பல மணிநேரங்கள் அவர் உரையாடி வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
குறித்த உரையாடலின் பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








