Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம்

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம்

11 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு கிழக்கிலே எமது தமிழ் இனத்தை வயது பாகுபாடுபாராமல் சித்திரவதை செய்து அழித்து புதைத்திருக்கின்ற வரலாற்றை நாங்கள் தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம். அந்த வகையிலே வடக்கு கிழக்கிலே எங்கு தோண்டினாலும் தமிழ் மக்களின் எச்சங்கள் காணப்படுவது சர்வசாதாரணமாகப் போய்விட்டது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரியும், தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அனைத்துவித இனப்படுகொலைகள், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி என்பவற்றுக்காக எதிர்வரும் செம்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் சமர்ப்பிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் (04) கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கும் முகமாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், கோ.கருணாகரம் (ஜனா), பா.அரியநேத்திரன், உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுமக்கள் உணர்வுடன் வருகை தந்து தங்கள் கையொப்பங்களை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்,

வடக்கு கிழக்கிலே எமது தமிழ் இனத்தை வயது பாகுபாடுபாராமல் சித்திரவதை செய்து அழித்து புதைத்திருக்கின்ற வரலாற்றை நாங்கள் தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம். அந்த வகையிலே வடக்கு கிழக்கிலே எங்கு தோண்டினாலும் தமிழ் மக்களின் எச்சங்கள் காணப்படுவது சர்வசாதாரணமாகப் போய்விட்டது.

வடக்கிலே மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே போன்று கிழக்கு மாகாணத்திலும் மனித உரிமை மீறல்கள் மூலம் சித்திரவைத் செய்து புதைக்கப்பட்ட இடங்கள் காணப்படுகின்றன. அவைகள் தொடர்பிலும் கண்டுபிடிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் செய்ய வேண்டும். இதற்கு சர்வதேசம் அக்கறை கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கதவைத் தட்டிய எமது போராளிகளின் வீரம், பொதுமக்களின் அவலம் இன்றைக்கு பல ஆதரரங்களுடன் வலுவெடுத்திருக்கின்றது. அந்த அடிப்படையில் இன்றைய எமது கையெழுத்துப் போராட்டமும் அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் முகமாக எமது மக்களின் உணர்வலைகளை இந்தக் கையெழுத்தின் ஊடாக காட்டுவதன் மூலம் இந்த மனித உரிமை மீறல்களை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தற்போதைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறுகின்ற வேளையில் எமது மக்களின் இந்த ஆணை என்பது மிகவும் முக்கியமானது. இங்கு களவெடுத்தவர்கள் களவினையும், களவெடுத்தவர்களையும் விசாரிக்க முடியாது என்ற அடிப்படையிலே எமது இனத்தை அழித்தவர்கள், அழிக்கப்பட்ட இனத்தின்பால் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதையும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. எனவே சர்வதேச விசாரணை ஊடாக இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமதும், எமது மக்களினதும் வேண்டுகோளாக இருக்கின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை
செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை

July 26, 2026
திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு
செய்திகள்

திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

July 26, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,025 இறக்குமதி வாகனங்கள் முடக்கம்; ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனைக்கு நடவடிக்கை
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,025 இறக்குமதி வாகனங்கள் முடக்கம்; ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனைக்கு நடவடிக்கை

July 26, 2026
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்
செய்திகள்

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்

July 26, 2026
Next Post
தரம் 5 புலமைப்பரிசில்; கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி அபிரிஜா

தரம் 5 புலமைப்பரிசில்; கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி அபிரிஜா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.