“சிறுவர்களை பாதுகாப்போம் வளமிக்க சமூதாயத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை செங்கலடி சேகரத்தின் வானவில் சிறுவர் அபிவிருத்தி திட்டம் வேப்பவட்டுவானில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்முடியாது என்ற கோஷத்துடன் சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் சிறுவர் உரிமை தொடர்பான இவ் பேரணி இலுப்படிச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி இலுப்படிச்சேனை சந்தியை வந்தடைந்தது.
















பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறுபட்ட வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர். பயமின்றி வாழ விடுங்கள், சிறுவர்களை காக்கும் சமூகமே உண்மையான சமூகம், சிறுவர் பாதுகாப்பே சமூகத்தின் பொறுப்பு, சமூகமே ஒரு சிறுவனின் சிரிப்பு உன்னுடைய பொறுப்பு என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியருந்தனர்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் பாடல்கள் மற்றும் சுவரொட்டிகள் என்பன பொதுமக்களிடையே காட்சிப்படுத்தப்பட்டன.
அங்கு கூடியிருந்த மக்களிடையே சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விசேடஉரையினை அருட்பணி செபமாலை பிரின்ஷன் நிகழ்த்தினார்.
குறித்த நிகழ்வில் பெற்றோர்கள் சமூதாயம் சார் உத்தியோகத்தர் பங்குபற்றியருந்தனர்.








