மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சித்தாண்டி விநாயகர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக குட முழுக்கு பெரும் சாந்தி விழா நேற்று 03.09.2025 வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதிஷ்டா பூஷணம் ஈசான சிவச்சாரியர் சிவஸ்ரீ கா.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற சாந்தி விழாவில் இலங்கையின் பல்வேறுபட்ட இடங்களில் இருந்து வந்த சிவாச்சாரியர்களின் பங்குபற்றுதலுடன் கும்பாபிஷேக ஆகம கிரியைகள் நடைபெற்று எல்லாம் வல்ல ஸ்ரீ நாககன்னி அம்மனின் அருட்கடாட்சங்கள் பெறப்பட்டது.
கடந்த 01.09.2025 அன்று கர்மாரம்பம்த்துடன் கிரியைகள் ஆரம்பமாகி 02.09.2025 அன்று எண்ணெய்க் காப்பு சாத்தப்பட்டு 03.09.2025 அன்று கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெற்றது.


















