இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ரொஷான் மஹனாம, தேசிய விளையாட்டு கவுன்சிலின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொஷான் மஹனாம, 1986ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை, இலங்கை கிரிக்கட் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








