Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் யுத்தத்தினால் அழிவடைந்த இந்து ஆலயங்களை புனரமைத்து பராமரிக்கும் பொறுப்பு மாவட்டத்தில் உள்ள வசதி படைத்த ஆலயங்களிடம் ஒப்படைப்பு!

மட்டக்களப்பில் யுத்தத்தினால் அழிவடைந்த இந்து ஆலயங்களை புனரமைத்து பராமரிக்கும் பொறுப்பு மாவட்டத்தில் உள்ள வசதி படைத்த ஆலயங்களிடம் ஒப்படைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நேற்று (24.08.2023) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்த கால சூழ்நிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்ததனால் பரவலாக பின்தங்கிய பகுதிகளில் கைவிடப்பட்டும் கவனிப்பாரற்று அழிவுற்ற நிலையிலும் பல சிறிய ஆலயங்கள் இருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டு அவற்றின் தொன்மைகள் அழிந்து போகா வண்ணம் மீள் புனரமைப்பு செய்யப்பட்டு வழிபாட்டிற்குரிய வகையில் அவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டதனைத் தொடர்ந்து இன்று அவ்வாறு இனங்காணப்பட்ட 4 ஆலயங்களை புனரமைத்து பராமரிக்கும் பொறுப்பு மாவட்டத்தில் உள்ள வசதி படைத்த ஆலயங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கெவிளியாமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் பேராலய நிருவாகத்திற்கும், புனானை இலக்குபுல் விநாயகர் ஆலயத்தினை களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய நிருவாகத்திற்கும், கச்சக்கொடி சுவாமிமலை ஸ்ரீ பிள்ளையார் முருகன் ஆலயத்தினை தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கும், மாகூப்பை வெலிக்கந்தை வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தினை சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயத்தின் நிருவாகத்தினருக்கும் மாவட்ட அரசாங்க அதிபரினால் உத்தியோக பூர்வமாக பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம், பட்டிப்பளை, கிரான் மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய பிரதேச செயலகங்களில் கலாசார உத்தியோகத்தர்கள், ஆலங்களின் நிருவாகிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து
செய்திகள்

நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து

August 1, 2026
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

August 1, 2026
17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!

August 1, 2026
முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!
செய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!

August 1, 2026
Next Post
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன்களை Online ஊடாக சந்தைப்படுத்த நடவடிக்கை!

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன்களை Online ஊடாக சந்தைப்படுத்த நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு