Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!

ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!

57 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூரில் பொது சுகாதாரப் பரிசோதகர் ஒருவரைப் பழிவாங்கும் நோக்கில், அவர் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்ததாகக் கூறப்படும் இருவரை ஏறாவூர் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (30) கைது செய்துள்ளனர்.

ஏறாவூர் 4ஆம் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொது சுகாதாரப் பரிசோதகர், அப்பகுதியிலுள்ள உணவகங்களில் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதன்போது, சுகாதாரமற்ற உணவகம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த உணவக உரிமையாளர், பொது சுகாதாரப் பரிசோதகரைப் பொலிஸாரிடம் சிக்கவைத்து பழிவாங்கும் நோக்கில் இருவருக்கு பணம் வழங்கி இந்தச் செயலில் ஈடுபடுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, கடந்த 26ஆம் திகதி ஏறாவூர் 4ஆம் பிரிவு பாடசாலை வீதியிலுள்ள தனது அலுவலகத்திற்கு முன்னால் பொது சுகாதாரப் பரிசோதகர் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில், மூன்று சிறிய பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் மறைத்து ஒட்டப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் கீழ்ப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பொதிகளைக் கவனித்த பொது சுகாதாரப் பரிசோதகர், அவற்றைச் சோதித்துப் பார்த்த பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில் அவை ஐஸ் போதைப்பொருள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்து போதைப்பொருளை மறைத்து வைத்த இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த 46 வயதுடையவரும், ஏறாவூர் 6ஆம் பிரிவைச் சேர்ந்த 32 வயதுடையவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் விசாரணையில் அவர்களிடம் உணவக உரிமையாளர் ஒருவர் பணம் வழங்கி செய்ய சொன்னதாக போலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த போதைப்பொருள் யாரிடமிருந்து பெறப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!

October 30, 2026
ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 30, 2026
மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு

October 30, 2026
மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!
செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!

October 30, 2026
அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!
செய்திகள்

அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!

October 30, 2026
பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

October 30, 2026
Next Post
ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு