Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கி தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் கணவன், மனைவியின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட 65 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கல்லாறு பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் தனது மகளின் வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்துக்காகக் காத்திருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த கணவன், மனைவி இருவரும் அவரிடம் பேச்சுக் கொடுத்து, கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடர்கள் அறுத்துச் செல்லக்கூடும் என எச்சரித்துள்ளனர். இதனால் அவர் தனது இரண்டு பவுண் தங்கக் காப்பு மற்றும் ஐந்து பவுண் தங்கச் சங்கிலியைக் கழற்றிப் கைப்பையில் வைத்துள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கியுள்ளதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள், அவர் மயக்கமடைந்த பின்னர் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் உடல்நிலை படிப்படியாகப் பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று வியாழக்கிழமை (29) உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து இளம் தாய் ஒருவரும் அவரது நான்கு வயதுக் குழந்தையும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வவுணதீவு பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்தில் அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த கணவன், மனைவியே இந்த நகைக் கொள்ளைச் சம்பவத்துடனும் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மயக்க மருந்து வழங்கப்பட்டதன் காரணமாகவே பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 30, 2026
ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!
செய்திகள்

ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!

October 30, 2026
மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!
செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!

October 30, 2026
அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!
செய்திகள்

அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!

October 30, 2026
பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

October 30, 2026
மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!
செய்திகள்

மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!

October 30, 2026
Next Post
ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!

ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு