Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேய்ச்சல் தரை சார்ந்த பிரச்சனைகளை தீர்த்துத் தருமாறு ஜனாதிபதியிடம் பண்ணையாளர்கள் கோரிக்கை

மேய்ச்சல் தரை சார்ந்த பிரச்சனைகளை தீர்த்துத் தருமாறு ஜனாதிபதியிடம் பண்ணையாளர்கள் கோரிக்கை

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

தமது போராட்டம் இரண்டு வருடங்களை கடந்துள்ளபோதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லையெனவும் அதனை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த 06 ஆம் திகதி சித்தாண்டியில் போராட்ட இடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடுசெய்த பண்ணையாளர்கள் தெரிவிக்கையில்,

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இந்த 15 ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைகின்றது. ஆகவே நாங்கள் இந்த அறவழிப் போராட்டத்தில் அடைந்த நன்மைகள் குறைவு. மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட மூவாயிரத்து இருபத்து ஐந்து ஹெக்டயர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதன் பின்பு சொன்னார்கள் 3000 ஏக்கர் தருவோம் என்று இன்னமும் 3000 ஏக்கர் மேய்ச்சல் தரையினை பதிவு செய்யவில்லை என்பது பெரிய ஆதங்கம். ஆகவே நாங்கள் இந்த இரண்டு வருடத்திற்கான பூர்த்தியை முன்னிட்டு எங்களுடைய போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என நினைக்கின்றோம்.

எங்களுக்கு ஒரு தீர்வை தருமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு தான் கால்நடைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். இக்கால்நடைகளினால் நாங்கள் மட்டும் பயனடைவது அல்ல. அரசாங்கத்திற்கும் இதனால் வருமானம் வந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆகவே எங்களுடைய கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை ஒவ்வொரு அரசாங்கமும் மாறி மாறி தருவதாக கூறி இந்த புதிய அரசாங்கமும் பெற்று தருவார்கள் என நம்பி கொண்டிருக்கின்றோம்.

மகாவலி ஊடாக ஒரு சில வேலைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது செய்யப்பட்டும் நிரந்தரம் இல்லாத வேலைகளாக இருக்கின்றன. ஆகவே எங்களுக்கு நிரந்தரமாக இந்த மேய்ச்சல் தரையினை பெற்றுத் தந்தால் இந்த அறவழிப் போராட்டத்தினை கைவிடுவோம் என்றும் வீதி ஓரங்களில் 697 நாட்களாகியும் இன்னும் ஒரு சாதகமான முடிவு அதில் எதுவும் கிடைக்காத தன்மையினால் இந்த இரண்டு வருட பூர்த்தியை நாங்கள் செய்வதற்கு முடிவு செய்துள்ளோம். ஆகவே அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் எங்களுக்கு இரண்டு வருட பூர்த்தியில் ஒரு தீர்வினை பெற்று தருமாறும், உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களுக்கு அனுசரணை செய்த பொது அமைப்பு, சிவில் அமைப்புகள், வடக்கு கிழக்கு பல்கலைக்கழகம், பொதுத் தொண்டர் நிறுவனங்கள், மேற்பாட்டாளர்கள், ஆலயங்கள், காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புகள், அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என ஆதரவு தந்த அனைவருக்கும் எங்களுடைய மதகுருமார்கள், முக்கியமாக அவர்களைத்தான் கூற வேண்டும்.

இரண்டு வருட பூர்த்தி 15ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அதற்கு எங்களுக்கு ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம். எங்களுடைய இந்த போராட்டம் இரவுபகலாக நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தை ஐக்கிய நாட்டு சபையிலே கதைத்தவர்கள் இந்த அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்வது இந்த மேய்ச்சல் தரையினை பெற்று தந்தால் நாங்கள் நிம்மதியாக கால்நடைகளை வளர்ப்போம் என்றும் அரசாங்கத்திற்கு முதலீடு பெற்று கொடுப்போம் என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த மேய்ச்சல் தரையினை எங்களுக்கு பதிவு செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களுடைய மேய்ச்சல் தரையினால் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் மூவாயிரம் மற்றும் மழைக்காலங்களில் 6000 லீட்டர் பால் கிடைக்கிறது. இதனால் தனியார்களும் வியாபாரம் செய்கின்றனர் இதனை நம்பி எங்களுடைய மயிலதமடு மாதவனை கிராமங்களில் 3000 குடும்பங்கள் இதை நம்பி வாழ்கின்றனர் (950 பண்னையாளர்கள்).

ஆகவே இதனை விருத்தி அடைய செய்வதற்கு எங்களுக்கு அரசாங்கத்தினால் காப்புறுதி திட்டங்கள் வந்திருக்கின்றது. எதுவும் இன்னும் வந்து சேரவில்லை அதனை சென்று கேட்டவுடன் உறுதி கேட்கின்றார்கள். உங்களுடைய கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை ஒதுக்கி தந்தாள் அவர்கள் எங்களிடம் உறுதி கேட்டால் உறுதிக்கு நாங்கள் எங்கே போவது ஆகவே எங்களுக்கென்று கால்நடை ஒதுக்கப்பட்டால் எங்களுடைய கால்நடை பண்ணை சங்கத்தினால் பண்ணையாளருக்கு கொடுப்பதற்கு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

சென்ற மாதம் பண்னையாளர்களுக்கு ஆடு கோழி மாடு வந்திருப்பதாக கூறினார்கள். சென்று கேட்ட போது உறுதி கேட்டார்கள். பணியாளர்களுக்கு இந்த உதவியை செய்யுமாறு கேட்டிருந்தோம் அதற்கு அப்படி செய்வதற்கு சட்டம் இல்லை என்று கூறினார்கள். உங்களுக்கென மேய்ச்சல் தரையினை பதிவு செய்து தந்தால். பதிவு செய்தது எங்களிடம் இருக்கின்றது என்று கூறி அந்த உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இப்போது அவர்கள் எங்களுக்கு தருவதாக இல்லை. எங்களையும் எங்களுடைய பண்னையாளர்களையும் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இனி பெரும் போகம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அனைவருமே மயிலத்தமடு மாதவனைக்கு மாடுகளை கொண்டு போக சொல்வார்கள்.

எங்களுக்கு போதிய வசதியும் இல்லை ஏனென்றால் உங்களுக்கு என்ன ஒதுக்கப்பட்ட இடங்களில் பெரும்பான்மை இனத்தவர்களும் இருக்கின்றார்கள். நேற்றைய பொழுது எங்களுடைய மாடுகளுக்கும் பண்ணையாளர் ஒருவருக்கும் சுறுக்கு வைப்பதும், பண்னையாளர்களுக்கு அடிப்பதாகவும் இப்படியான பிரச்சனைகள் நடக்கின்றது.

சுமுகமாக இருந்த நிலையில் சட்டவிரோத பயிர்செய்கையாளர்கள் அவர்களையும் வெளியேற்றி தருமாறும், சிங்கள தமிழ் முஸ்லிம் மூன்று இனத்தவரும் வாழ்வதற்கு வழி செய்து தருமாறும் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த சட்ட விரோத பயிர்செய்கையாளர்கள் வந்து காடுகளை வெட்டுவதுமாக இருக்கின்றனர். அவர்களை வெளியேற்றுமாறும் நாங்கள் அறிவித்திருந்தோம். எங்களுடைய அவசர தேவைகளுக்கு அதனால் செல்லவும் இயலாது. அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இப்படியான சேதங்களை இல்லாமல் செய்து எங்களையும் பாதுகாத்து எங்களுக்கான வாழ்வாதாரத்தையும் ஒதுக்கி தந்து, மேச்சல் தரையினையும் ஒதுக்கி தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.என்றனர்.

தொடர்புடையசெய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

September 21, 2026
அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
Next Post
இலங்கை வானில் தென்பட்ட சிவப்பு நிலா!

இலங்கை வானில் தென்பட்ட சிவப்பு நிலா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.