‘ரெயின்போ ஏஜென்சி’ என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், வெளிநாட்டு வேலை தேடுபவர்களிடமிருந்து ரூ. 460 மில்லியன் மோசடி செய்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று (09) தெரிவித்தார்.
குறித்த நிறுவனத்திற்கு எதிராக 400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், அந்த முறைப்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.









