Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திடீரென இடைநிறுத்தப்பட்ட நவகிரிநகர் பேருந்து சேவை;  மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

திடீரென இடைநிறுத்தப்பட்ட நவகிரிநகர் பேருந்து சேவை; மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீள சேவையிலீடுபடுத்துமாறு தெரிவித்து மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்று (10) போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

மட்டக்களப்பிலிருந்து தினமும் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் நவகிரிநகர் வரையில் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து அப்பகுதிக்குரிய சேவையை ஒருவார காலத்திற்கு மேலாக திடீரென நிறுத்தியதாக தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள், எனப் பலரும் இணைந்து பதாகைளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்னால் உழவு இயந்திரங்களில் வந்திறங்கி ஒன்றுகூடிய பொதுமக்கள், கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறு வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலகம் வரை சென்றனர்.

பிரதேச செயலகத்திற்கு முன்னால் வைத்து இலங்கை போக்குவரத்து சாலையின் போக்குவரத்து சேவையை மீறப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த வெல்லாவெளி பொலிஸார் போராட்டகாரர்களுடன் கலந்துரையாடி பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கு முயற்சித்த வேளையிலும், தமக்கு உடன் தீர்வு வேண்டும் என தெரிவித்து போராட்டக்காரர்கள் அதற்கு இணங்கவில்லை,

இந்நிலையில் தமது பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சீருடையுடன் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை ஏற்க முடியாது என கூறி சம்பவ இடத்திற்கு வந்த குறித்த பாடசாலை மாணவர்களின் பாடசாலை அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உடன் வெளியேறுமாறும் தெரிவித்தார்.

எனினும் தமது பிள்ளைகள் கடந்த ஒரு வார காலமாக பாடசாலைக்கு செல்லவில்லை. இன்றைய தினமும் பாடசாலைக்கு செல்ல காத்திருந்த வேளையிலும், பாடசாலைக்கு செல்வதற்கு பேருந்து இன்மையால், நாம் பிள்ளைகளை இங்கு அழைத்து வந்துள்ளோம்,

எமது பிள்ளைகள் ஏன் பாடசாலைக்கு வர முடியாது என கேட்க முடியாத அதிபர் போக்குவரத்துக்காக போராடும், எமது மாணவர்களை தடுக்க முடியாது என தெரிவித்து, குறித்த பாடசாலை அதிபருக்கும், போராட்டகாரர்களுக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக அதிபர் அங்கிருந்து வெளியேறினார்.

இது இவ்வாறு இருக்க போரதீவுபற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் போராட்டகாரர்களுடன் கலந்துரையாடியதற்கிணங்க உதவிப் பிரதேச செயலாளர், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு நிலைமையை எடுத்துக்கூறினார்.

அதன்படி நாளை முதல் மட்டக்களப்பிலிருந்து நவகிரிநகருக்கான போக்குவரத்து சேவை சீராக இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கு உதவிப்பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.