Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை றோமன் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டும்; ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் கருத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி

இலங்கை றோமன் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டும்; ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் கருத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி

12 months ago
in அரசியல், காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

முதல் தடவையாக நாட்டில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகர் றோமன் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்கின்ற ஒரு சிபாரிசை வலியுறுத்தி இருப்பது மிகவும் முக்கியமான விடையமாக கருதுகின்றோம். இதை இலங்கை தமிழரசு கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளது. எனவே இலங்கை அரசாங்கத்துக்கு உறுப்பு நாடுகள் இது சம்பந்தமாக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு என தமிழரசு கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் நா.உறுப்பினருமான எம். சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (14) இடம்பெற்றது இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அம்பாறை ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்து பல பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அங்கு சுமந்திரன் தெரிவிக்கையில்,

34 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்திருக்கின்றோம் அதைவிட ஏனைய சபைகளில் பிரதிநிதித்துவம் இருக்கிறது எனவே செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தோம்.

அரசாங்கம் திட்டமிட்டு எங்கள் உள்ளூராட்சி சபை தவிசாளர்களை மற்றும் உள்ளுராட்சி மன்ற நிர்வாகத்தையும் புறக்கணிப்பதாக சகல மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன இதனை நாங்கள் அவதானித்திருக்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினராக இருக்கட்டும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக இருக்கட்டும் அனைவரையும் புறக்கணித்து தேசிய மக்கள் சக்தி முற்று முழுதாக தாங்கள்தான் ஏதே செய்வதாக எல்லா மாவட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு கட்சி சார்பில் கடிதம் ஒன்றை அனுப்புவதாக தீர்மானித்துள்ளோம்.

அதேவேளை பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கோர இருக்கிறோம் அதற்கு மேலாக எங்கள் கட்சி சார்பில் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு அது சம்பந்தமான விடயங்களுக்கு கட்சியின் தலைவரும் நானும் கையொப்பம் இட்டு அனுப்பிய அறிக்கைகள் அனைத்தும் மத்திய செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

தற்போது 60 வது கூட்டத் தொடரிலேயே இலங்கையிலே நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலும் ஊக்குவிப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் வரைபு சம்மந்தமாக அங்கு உத்தியோகப்பற்று அற்ற கூட்டம் இடம்பெறவுள்ளதில் பல விடையங்கள் பேசப்படும், இதில் எமது கட்சியின் ஈடுபாடு பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. பிரித்தானியா மற்றும் இணை அனுசரனை நாடுகளுடன் நாங்கள் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கின்றோம்.

இதில் என்ன என்ன விடையங்கள் முக்கியமானவை கைவிடப்பட முடியாதவை சம்பந்தமாக பேசி இருக்கிறோம். அதேவேளை மற்றைய உறுப்பு நாடுகளுடன் நாங்கள் தொடர்ச்சியாக உரையாடலை வைத்துக் கொள்ள வேண்டும் என இந்த கூட்டத்தில் வற்புறுத்தப்பட்ட உள்ளது. 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த பொறுப்புகள் பகிர்ந்து கொடுக்கப்படும். அது மட்டும் அல்ல கூட்டாக எங்களது நிலைப்பாட்டை எடுத்து அந்தந்த நாடுகளுடன் அவர் அவர் தொடர்ச்சியாக உறவை பேண வேண்டும் என வரும் நாட்களிலே ஒழுங்குகளை செய்ய இருக்கிறோம்.

இன அழிப்புக்கான மன எண்ணம் நோக்கம் வெளிப்படும் வண்ணமாக பல சாட்சிகள் வெளிவர தொடங்கி இருக்கிறது. செம்மணியில் புதைகுழி தொடர்பாக எழுதிய கடிதங்களில் மிக தெளிவாக தெரிவித்துள்ளோம்.

சர்வதேச ஈடுபாடு அந்த அகழ்வு பணி தொடங்கும் தருணத்தில் இருந்து இருக்க வேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் அரசுக்கு கடிதம் மூலம் தெரிய படுத்தியுள்ளோம். அதற்கு மேலதிகமாக சர்வதேச நீதிக்கான நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றிக்கு இலங்கை சம்பந்தமான விடையங்களை பாரப்படுத்துவதற்கு நாங்கள் உறுப்பு நாடுகளுக்கு மிக தெளிவாக கோரிக்கை விடுத்துள்ளோம்

ஒரு முழுமையான ஒரு அரசியல் தீர்வு தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக நாட்டிலே உருவாக வேண்டுமாக இருந்தால் வடகிழக்கில் அதிகூடிய ஒரு அதிகாரப்பரப்பின் ஊடாக சமஷ்டி அடிப்படையிலான புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அதேவேளை உடனடியாக அரசாங்கம் மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம் ஆகவே சர்வதேச சமூகம் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ளனர். அதேவேளை உள்ளக விசாரணையை அவர்கள் வலியுறுத்துவதை நாங்கள் ஏமாற்றமாக சொல்லியுள்ளோம்

ஆனால் உறுப்பு நாடுகள் உலகளாவிய நியாயாதிக்கம் உபயோகித்து இலங்கையில் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும், சாட்சிகளை சேகரிக்கின்ற பாதுகாக்கின்ற ஓசில என்கிற பொறிமுறையில் எடுக்கப்பட்ட சாட்சியங்களை அதற்கு அந்த நாடுகள் பாவிக்கலாம் என மனித உரிமை ஆணையாளர் கூறியிருப்பது மிக வரவேற்கத்தக்கது

இலங்கையின் உடைய ஆணைக்குழு ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர், றோமன் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்கிற ஒரு சிபாரிசை முன்வைத்துள்ளனர். இது மிக மிக முக்கியமான விடையம் நீண்ட காலமாக இந்த விடையத்தை தமிழரசு கட்சி வலியுறுத்தி வந்துள்ளோம்.

முதல் தடவையாக நாட்டில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகர் இதை வலியுறுத்தி செல்லி இருப்பது மிகவும் முக்கியமான விடையமாக கருதுகின்றோம் இலங்கை அரசாங்கத்துக்கு உறுப்பு நாடுகள் இது சம்பந்தமாக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
Next Post
ஹோட்டல் முகாமையாளரை கொலை செய்த குற்றச்சாட்டில் 3 முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஹோட்டல் முகாமையாளரை கொலை செய்த குற்றச்சாட்டில் 3 முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.