Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

12 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதியோ வியாபார அனுமதியோ வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு அனுமதி வழங்க கூடாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையின் இன்றைய அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம் (18) நடைபெற்ற போது பெரியபுல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் அவர்கள் பெரிய புல்லு மலையில் அமைக்கப்பட உள்ள தண்ணீர் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பிரேரணையை சபைக்கு கொண்டுவந்ததன் பிரகாரம் அது குறித்த விவாதம் சபையில் நடைபெற்றது.

இதன் போது பேசிய சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன்,

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள புல்லு மலை கிராமத்தில் அமைக்கப்பட உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் மாகா தொழிற்சாலைக்கு கடந்த 2018 ம் ஆண்டே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் உள்ளது . இன் நிலையில் இன்று மீண்டும் இந்த தொழிட்சாலைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

உண்மையில் புல்லுமலை கிராம மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். பிரதேச சபையில் இருந்து அந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய பவுசரை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. இதுவரை அந்த மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தொழிட்சாலைக்கு எப்படி அனுமதி வழங்க முடியும் .

எனவே குறித்த தண்ணீர் தொழிட்சாலைக்கான அனுஆவணங்கள் எதுவும் இல்லை . தண்ணீர் தொழிற்சாலைக்கான கட்டிட அனுமதி மற்றும் வியாபார அனுமதிக்காக பிரதேச சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அதனை வழங்க கூடாது என சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார் . இது குறித்து அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்ததோடு

ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதி வியாபார அனுமதி வழங்கப்படாது எனவு குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு அனுமதி அனுமதி வழங்க கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
Next Post
ட்ரம்ப் வருகைக்கு எதிராக பிரிட்டனில் மக்கள்கடல் போராட்டம்

ட்ரம்ப் வருகைக்கு எதிராக பிரிட்டனில் மக்கள்கடல் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு