Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரை பிரதேச சபையில் உள்ளூராட்சி வார விழிப்புணர்வு நிகழ்வுகள்

வாகரை பிரதேச சபையில் உள்ளூராட்சி வார விழிப்புணர்வு நிகழ்வுகள்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் நிகழ்வுகள் இன்று (20) சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் தலைமையில் இடம்பெற்றன.

இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாடு எனும் தலைப்பில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில், வாகரை பிரதேச மாணவர்களுக்கான உள்ளுராட்சி வார விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. இதில், பொதுமக்கள் எவ்வாறு உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளைப் பெற முடியும், அதன் பயன்கள் என்ன என்பன குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், உள்ளுராட்சி தொடர்பான வினாக்கள் அடங்கிய பொது அறிவு வினா-விடை போட்டி நடத்தப்பட்டு, வெற்றியாளர்களும் பங்கேற்ற மாணவர்களும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் கௌரவிக்கப்பட்டனர். அதேவேளை, இலக்கியம் மற்றும் கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந. ஜங்கரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் ம. விஜி மற்றும் சபை செயலாளர் தொ.செ.பி. குயின்ரஸ் கலந்து கொண்டனர்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், “வளமான நாடும் அழகான வாழ்க்கையும்” என்ற எண்ணக்கருவில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில், 2025 செப்டம்பர் 15 முதல் 21 வரை நாடு முழுவதும் உள்ளுராட்சி வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல், வாகரை பிரதேச சபையின் நிறைவு நிகழ்வு வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வாகரை கராச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு அதிதிகளாக, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி க. அமலினி மற்றும் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி எம்.ஆர். எவ். றிப்கா ஷபீன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி
உலக செய்திகள்

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி

September 24, 2026
ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!
செய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

September 24, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!

September 24, 2026
கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!

September 24, 2026
22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!

September 24, 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!
செய்திகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!

September 24, 2026
Next Post
வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதல் விளையாட்டு விழா

வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதல் விளையாட்டு விழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு