Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நினைவேந்தலில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு; யூரியூப்பருக்கு அனுமதி

நினைவேந்தலில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு; யூரியூப்பருக்கு அனுமதி

1 year ago
in செய்திகள்

இலங்கை விமானப்படையினால் 22.09.1995 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவு தினம், திங்கட்கிழமை (22) அனுஷ்டிக்கப்பட்டது.

நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த குழந்தைகளுக்கு உணர்வுரீதியாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவுகள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எனினும் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்ற போது, வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதி அளிக்கவில்லை என காரணம் காட்டி ஊடகவியலாளர்களை அதிபர் வெளியேற்றினர்.

இது தொடர்பாக வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளரிடம் ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தன்னால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்றும், பாடசாலை அதிபரிடம் தான் அனுமதிக்குமாறு தொலைபேசியில் தெரிவிப்பதாக தெரிவித்த நிலையில் நாகர்கோவில் மகா வித்தியாலய அதிபரால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும், அதிபரின் உறவினரான வல்வெட்டித்துறையை சேர்ந்த யூரியூப்பர் ஒருவர் நினைவேந்தல் நிகழ்வுகளை காணொளி பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.

செல்வன் மயில்வாகனம் கணகநாதன்

செல்வன் இராமநாதன் கோபிதரன்

செல்வன் சுந்தரலிங்கம் பழனி

செல்வன் நாகமுத்து செந்தில்வேல்

செல்வன் கிருஷ்ணகுமார் தவசீலன்

செல்வன் இராசரத்தினம் உமாகாந்தன்

செல்வி அல்போன்ஸ் அமலவிஜி

செல்வி இரவிந்திரராசா அமிர்தா

செல்வி இராசரத்தினம் கவிதா

செல்வி இராமநாதன் மேதினி

செல்வி மார்க்கண்டு நாகலோஜினி

செல்வி பாலச்சந்திரன் ரஜிதா

செல்வி தாமோதரம் சகுந்தலா

செல்வி இராமச்சந்திரன் சங்கீதா

செல்வி சிதம்பரப்பிள்ளை சசிருபி

செல்வி செல்வகுலசிங்கம் செல்வதி

செல்வி குகசரவணமலை தர்சினி

செல்வி சுந்தரலிங்கம் தர்சினி

செல்வி பூலோகராசா துஷாந்தினி

செல்வி நவரத்தினசாமி உமாதேவி

செல்வி தர்மலிங்கம் துஷந்தினி ஆகிய மாணவச் செல்வங்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த குழந்தை செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
கணக்காய்வாளர் நாயகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள்; திருத்தச் சட்டம் நிறைவேற்றம்

கணக்காய்வாளர் நாயகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள்; திருத்தச் சட்டம் நிறைவேற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு