Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணக்காய்வாளர் நாயகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள்; திருத்தச் சட்டம் நிறைவேற்றம்

கணக்காய்வாளர் நாயகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள்; திருத்தச் சட்டம் நிறைவேற்றம்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.

தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தைக் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலம் 2025.07.08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2025.09.11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தினூடாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் தேசியக் கணக்காய்வு சட்டம் திருத்தப்படுகின்றது.

அதற்கமைய, கணக்காய்வாளர் நாயகத்தினால் பரிந்துரைக்கப்படும் மிகைக்கட்டணம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குக் கட்டமைப்பு, காலவரையறை, நடவடிக்கை முறை உள்ளடங்கலாக மிகைக் கட்டணப் பரிசீலனைக் குழுவொன்றை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை வழங்குவது இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.

அத்துடன், மோசடி அல்லது ஊழல் தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்வதற்குக் கணக்காய்வாளர் நாயகத்துக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் வருடாந்த விரிவுபடுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்கும் காலம் 5 மாதத்திலிருந்து 6 மாதமாக அதிகரித்தல் பிரதான திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதன்மை சட்டவாக்கத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகளின் கீழ் தவறுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கான தண்டனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாகர காரியவசம் கைது!
செய்திகள்

சாகர காரியவசம் கைது!

August 10, 2026
ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்!
செய்திகள்

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்!

August 10, 2026
33 சிறைச்சாலைகளிலும் ஸ்கேனர் இயந்திரங்கள்; அரசு நடவடிக்கை!
செய்திகள்

33 சிறைச்சாலைகளிலும் ஸ்கேனர் இயந்திரங்கள்; அரசு நடவடிக்கை!

August 10, 2026
சவாலான காலநிலைக்கு மத்தியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மலையக மாணவர்கள்!
செய்திகள்

சவாலான காலநிலைக்கு மத்தியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மலையக மாணவர்கள்!

August 10, 2026
மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட 16 வயது சிறுவன் கைது!
செய்திகள்

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட 16 வயது சிறுவன் கைது!

August 10, 2026
காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!
செய்திகள்

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!

August 10, 2026
Next Post
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைதிறப்புக்கு வர்த்தக சங்கம் கண்டனம்

கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைதிறப்புக்கு வர்த்தக சங்கம் கண்டனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு