Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடியில் யானைகள் அட்டகாசம்; “வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கடமைகளை சரியாக செய்யவில்லை”-விவசாயிகள்

களுவாஞ்சிகுடியில் யானைகள் அட்டகாசம்; “வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கடமைகளை சரியாக செய்யவில்லை”-விவசாயிகள்

12 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் காட்டுயானைகளினால் தோட்டச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் காட்டுயானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருகின்றது.

நேற்று (22) அதிகாலை தேற்றாத்தீவு பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் விவசாய செய்கைகளை பாதிக்கச்செய்துள்ளதுடன் அறுவடை நிலையிலிருந்த கொச்சிக்காய் தோட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

யானையின் அட்டகாசம் காரணமாக கொச்சிச்செய்கை, சோளன், கச்சான், கத்தரி போன்ற பல்வேறு பயிர் தோட்டங்களில் சேதமேற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான யானையின் அட்டகாசங்கள் தற்போதுதான் இப்பகுதியில் ஆரம்பித்துள்ளதாகவும் இதற்கு முன்னர் ஆற்றுக்கு அப்பால் உள்ள கரை பகுதிகளில் இவ்வாறான யானையின் அசம்பாவிதங்கள் இடம் பெற்றதாகவும் இப்போது இந்த பகுதியிலும் இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுவதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் அசமந்த போக்காக செயல் படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுவரை காலமும் யானை தேற்றத்தீவு பகுதிக்குள் வந்ததில்லை எனவும் இதுவே முதல் தடவை எனவும் விவசாயிகள் தெரிவித்ததுடன் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து இழப்பீடுகளை வழங்குவதுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பளத்தினை பெற்றுக்கொண்டு தங்களது கடமைகளை சரியாக செய்யவில்லை எனவும் இதன் போது விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
Next Post
வடக்கு கல்வி முறைகேடுகளை எதிர்த்து சிவசேனை அமைப்பினரால் போராட்டம்

வடக்கு கல்வி முறைகேடுகளை எதிர்த்து சிவசேனை அமைப்பினரால் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு