மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவரை 2007ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பாவுக்கு முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலச்சம் ரூபா வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் நேற்று முன்தினம் (23) தீர்ப்பளித்தார்.
கடந்த 2007ம் ஆண்டு குறித்த 7 வயது சிறுமியின் தந்தையின் சகோதரனான 32 வயதுடைய சித்தப்பா பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்து வழக்கு இடம் பெற்று வந்துள்ளது.

குறித்த நபருக்கு 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்தி சென்று மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு குற்றச்சாட்டுகள் சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த 11ம் திகதி இனம் காணப்பட்டார்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் நேற்று முன்தினம் எடுத்து கொள்ளப்பட்ட போது குற்றவாளிக்கு முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலச்சம் ரூபாய் வழங்கும் நீதிபதி உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.








