Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு

12 months ago
in செய்திகள்

கல்வி அமைச்சின் 03/2019 சுற்றறிக்கைக்கு இணங்க, கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்களின் ஜனநாயக விழிப்புணர்வையும் தலைமைத்துவத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், மூன்றாவது மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று (24) பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஏனைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் பங்கெடுப்புடன் நடைபெற்ற இந்த மூன்றாவது மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை சபை செயலாளரும், அதிபருமான எம்.சி.எப். நஸ்லின் ரிப்கா அன்ஸார் உத்தியோகபூர்வமாக தொடக்கி வைத்தார்.

இவ்வமர்வில் மாணவர் பாராளுமன்றத் தலைவரும் (சபாநயகர்) பிரதமர், அமைச்சர்கள், சபை பிரதானிகள், உறுப்பினர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்வுடன் நிறைவேற்றினர். கல்வி, விளையாட்டு, கலாச்சாரம், சமூக சேவை, ஒழுக்கம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பான கருத்துக்களும் முன்மொழிவுகளும் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களினால் விவாதிக்கப்பட்டன.

அமர்வில் கலந்து கொண்ட அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள் மாணவர்களின் ஜனநாயக பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வை பாராட்டி, எதிர்காலத் தலைமைத்துவ வளர்ச்சிக்கு இது போன்ற நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வு, மாணவர்களுக்கு கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், ஒருங்கிணைந்த செயல் திறன், ஜனநாயக மரபுகள் ஆகியவற்றை அனுபவபூர்வமாக கற்றுத் தரும் வகையில் அர்த்தமிக்க ஒரு தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
Next Post
மட்டக்களப்பில் 7 மற்றும் 8 வயது இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பில் 7 மற்றும் 8 வயது இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு