ஆசியக்கிண்ணத்தின் வெற்றிக்கிண்ணம் மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசியகிண்ணத்தின் வெற்றிக்கிண்ணத்தை வாங்குவதில்லை என்று ஏற்கனவே நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதனால் அவர் பரிசளிப்பு விழாவில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

ஆசியகிண்ணத்தின் வெற்றிக்கிண்ணம் எங்களிடம் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பாக நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. கூட்டத்தில் முறையிடப்படும்.
விரைவில் ஆசியகிண்ணத்தின் வெற்றிக்கிண்ணம் மற்றும் பதக்கங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








