Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டவர்களா? ;வைத்தியர் விளக்கம்!

உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டவர்களா? ;வைத்தியர் விளக்கம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மருந்துகள் மற்றும் பல்வேறு நோய்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பல குழுக்களில் அங்கம் வகிக்கும் இலங்கை மருத்துவ சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணரான ஆனந்த விஜேவிக்ரம, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அந்த தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பல்வேறு சிக்கல்களின் சாத்தியம் மிகக் குறைவு என தெரிவித்துள்ளார்.

அந்த தடுப்பூசிகளை பெறாதவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் குறைவு. தடுப்பூசி பெறாமல் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கே இவ்வாறான பாதிப்புகள் அதிகமாக உள்ளது.

தடுப்பூசியால் நன்மையே தவிர எவ்வித தீமையும் இல்லை. இந்நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிரான ஒரு குழுவினர் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை செய்து வருகின்றனர். அவர்கள் கொரோனா தடுப்பூசி மாத்திரமின்றி அனைத்து தடுப்பூசிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புகைபிடித்தல், உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மனஅழுத்தம் ஆகியனவே இதயநோய்களுக்கு பிரதான காரணமாக அமைவதாக களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணரான வைத்தியர் பத்திய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் சிறுவயதிலேயே மாரடைப்புக்கு முகங்கொடுக்கும் அபாயத்தை தவிர்க்க முடியும் என களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் பத்திய ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை

August 3, 2026
வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
Next Post
மட்டக்களப்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி போராட்டம்!

மட்டக்களப்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு