Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு; பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில்

மட்டக்களப்பில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு; பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” என்ற தேசிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் இன்று (06) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களால் முன்னிலை வகித்து நடத்தப்பட்டது.
பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆறுமுகத்தான், குடியிருப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி, எல்லைநகர் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 70 வீடுகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் அரசாங்கத்தினால் தலா ரூபா 10 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இது, நாட்டில் வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டமாகும்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, செக்கலடி பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என். திலகநாதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வேளையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்ற குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கும் கனவை நனவாக்கியுள்ளோம்.
எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் உறுதியாக செயல்படுகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் நேர்மையான தலைமையின் கீழ் நாடு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் நிலைநிறுத்தம் அடைந்துள்ளது.

மக்கள் நம்பிக்கையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்” எனக் கூறினார்.

“எதிர்க்கட்சிகள் பரப்பிய பொய்ப் பிரச்சாரங்கள் இன்று முறியடிக்கப்பட்டுள்ளன.
ஒரு ஆண்டுக்குள் மக்கள் நம்பிக்கையை மீட்ட அரசாங்கமாக நாங்கள் திகழ்கிறோம்”
எனவும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்
செய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்

September 10, 2026
யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்
செய்திகள்

யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

September 10, 2026
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து
செய்திகள்

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து

September 10, 2026
மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
Next Post
தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு;தபால் தொழிற்சங்கம் அதிருப்தி

தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு;தபால் தொழிற்சங்கம் அதிருப்தி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு