நுவரெலியா பகுதியில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு தாமரை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாமரை இனங்களில் மிகவும் மாறுபட்ட (Strobilanthes sexennis) ஸ்ட்ரோபிலாந்தஸ் செக்சென்னிஸ் எனப்படும் “நீல தாமரை” மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 36 வகையான தாமரை இனங்கள் இதுவரை பதிவாகியுள்ளன.
இந்த இனத்தின் ஏழு வகைகளில் இரண்டு கடந்த நூறு ஆண்டுகளில் பூக்கவில்லை எனவும், அவை அழிந்துவிட்டதாகவும் கருதப்பட்டுள்ளது.
இந்த தாமரை இனம் கடைசியாக 1850 களில் பூத்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் பூப்பதைக் காண முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








