Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சைவ உணவு மறுப்பு; விமானத்தில் இலங்கை வைத்தியர் உயிரிழப்பு

சைவ உணவு மறுப்பு; விமானத்தில் இலங்கை வைத்தியர் உயிரிழப்பு

10 months ago
in செய்திகள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த 85 வயதுடைய ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜயவீர, கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் தாம் கோரிய சைவ உணவு (Vegetarian Meal) மறுக்கப்பட்டதன் விளைவாக, வேறு உணவு தொண்டையில் சிக்கி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இழப்பீட்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

உயிரிழந்த மருத்துவரின் மகனான சூர்யா ஜயவீர கடந்த 3 ஆம் திகதி மத்திய கலிபோர்னிய கூட்டாட்சி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமான கொண்ட அசோக ஜயவீர (Asoka Jayaweera) லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.

கடுமையான சைவ உணவுப் பழக்கம் கொண்டிருந்த அசோக ஜயவீரவுக்கு, விமானப் பணியாளர்கள் அவர் கோரிய உணவை வழங்க மறுத்துள்ளனர்.

“சைவ உணவுகள் தீர்ந்துவிட்டன” என்று கூறி, அவருக்கு இறைச்சி கலந்த பொதுவான உணவை கொடுத்து, இறைச்சியைத் தவிர்த்துவிட்டுச் சாப்பிடுமாறு பணித்துள்ளனர்.

இறைச்சியைத் தவிர்த்துவிட்டுச் சாப்பிடுவதற்கு அசோக ஜயவீர முயற்சிக்கும்போது, உணவின் ஒரு பகுதி அவரது தொண்டையில் சிக்கி, அவர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட நேரத்தில் விமானம் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் மேலே பறந்து கொண்டிருந்தபோதிலும், விமானி அவசரமாகத் தரையிறங்க மறுத்துவிட்டார்.

விமானம் ஆர்க்டிக் கடல் பகுதியைக் கடந்து செல்வதால் திசை திருப்ப முடியாது என்று விமானக் குழுவினர் கூறியதாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!

July 30, 2026
கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!

July 30, 2026
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!
செய்திகள்

வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!

July 30, 2026
13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!
செய்திகள்

13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!

July 30, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!

July 30, 2026
Next Post
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்று சாதனை: கிழக்கு மாகாணத்தில் முதல் கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்று சாதனை: கிழக்கு மாகாணத்தில் முதல் கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு