Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் முத்துநகர் காணி மீட்பு போராட்டகாரர்களுக்கு ஆதரவளித்து ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தபோது, 1972 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் பின்னர் 1984 ஆம் ஆண்டில் துறைமுக அதிகார சபைக்கு மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தக் காணிகளில் பல தசாப்தங்களாக விவசாயம் செய்து வந்த மக்களுக்கு அரசாங்கம் தற்போது சட்டவிரோத காணி என கூறுவது அநியாயம் எனவும், விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த அரசாங்கங்களின் பிழைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், “மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள தற்போதைய அரசாங்கம் விரைவாக தீர்வு வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வரலாற்று உரிமையையும் மதிக்க வேண்டும்,” என்றார்.

அதேவேளை, கடந்தகாலத்தில் முத்துநகர் காணி பிரச்சினையில் மக்களுடன் இணைந்து போராடிய சில அரசியல்வாதிகள் தற்போது அமைதியாக இருப்பது வருத்தத்திற்குரியது என்றும் அவர் விமர்சித்தார்.

“முஸ்லிம் சமூகத்தின் காணிகளை மீள வழங்கி, விவசாய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக தொடர அரசாங்கம் முன்வர வேண்டும். இல்லையெனில் இந்த பிரச்சினை சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்க்கும்,” என்று ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் எச்சரித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
Next Post
முல்லைத்தீவில் இராணுவ சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு அறிவிப்பு

முல்லைத்தீவில் இராணுவ சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு