உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற, உயர் பதவிகள் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை உறுதிப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரின் கருத்தை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் பல சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியமை தொடர்பில் தற்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வவுனதீவு தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் ரவீ செனவிரத்ன இதன்போது தெளிவுபடுத்தியகவும், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர்.








