அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்ததாகக் கூறப்படும் விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் அம்பாறை தலைமையகப் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், உளவாளி ஒருவரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின்போது விடுதியின் முகாமையாளராக பணியாற்றிய நபரும், அங்கிருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட முகாமையாளர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவரும், பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








