தன்னுடைய அனுமதியின்றி ஆசியகிண்ணத்தை எடுக்கக் கூடாது எனவும், யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9ஆவது முறையாக ஆசியக்கிண்ண சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய அணி வீரர்கள் ஆசியக்கிண்ணத்தை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து பெற மறுத்ததையடுத்து, கிண்ணத்தை ஆசியக்கிண்ண நிர்வாகமே எடுத்துச் சென்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியிடம் இன்னும் ஆசியக்கிண்ணம் ஒப்படைக்கப்படவில்லை.
இந்த நிலையில், தன்னுடைய அனுமதியின்றி ஆசியக்கிண்ணத்தை எடுக்கக் கூடாது எனவும், யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.








