Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2025 செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 7 வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி செய்தவர்கள், உரிமமின்றி மீன்பிடி செய்தவர்கள் மற்றும் உள்ளூர் நீர்நிலைகளில் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 11 டிங்கி படகுகள், இரண்டு படகுகள் மற்றும் ஒரு கெப் வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகர எல்லைகள், திருகோணமலை மலைமுந்தல், கொக்குத்துடுவாய், போல்டர் பொயிண்ட், கொக்கிளாய், கதிரவெளி பொயிண்ட், புடவைக்கட்டு, ஃபவுல் பொயிண்ட், ஓட்டமாவடி, பிளாண்டன் பொயிண்ட், கல்குடா, கல்லராவ கடற்கரை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் கெப் வாகனத்துடன், கிண்ணியா, முல்லைத்தீவு, குச்சவெளி, லங்காபட்டுன, கோப்பாய் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
Next Post
சீனப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 25 ஆண்டுகளில் 7.6 ஆண்டுகள் உயர்வு

சீனப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 25 ஆண்டுகளில் 7.6 ஆண்டுகள் உயர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு