யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த யூட் மேரின் 27 வயதுடைய பிரபல கால்பந்தாட்ட வீரரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் விதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.
மேலும் விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









