Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியை விட கடற்படைக்கு அதிக அதிகாரமா?; எம்.பி. கஜேந்திரகுமார் கேள்வி

ஜனாதிபதியை விட கடற்படைக்கு அதிக அதிகாரமா?; எம்.பி. கஜேந்திரகுமார் கேள்வி

11 months ago
in செய்திகள்

மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் செயற்பாடு தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவர்களாக கடற்படை உள்ளார்களா அல்லது ஜனாதிபதி யாழ்ப்பாண மக்களை ஏமாற்றுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறாரா என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் அதனை எமது அரசாங்கம் செயற்படுத்தும் என வாக்குறுதி வழங்கி இருந்தார்.

ஆனால் இந்த அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் மிகக் குறுகிய ஏக்கர் காணிகளை மட்டும் விடுவித்தமை அவர்களும் கடந்த அரசாங்கங்களைப் போல வாக்குகளை பெறுவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றிய நாடகமாகவே பார்க்க முடிகிறது.

யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்றும் தமது பூர்வீக நிலங்களுக்குள் மக்கள் செல்ல முடியாத அவல நிலையில் இருக்கின்றனர்.

அண்மையில் ஜனாதிபதி செயலகம் முன் வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பினர் மக்களை ஒன்று திரட்டி தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தை நடத்திய நிலையிலும் தற்போது கடற்படை தமது தேவைக்காக தனியார் காணியை அபகரிக்கும் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது.

இந்த நாட்டின் அதிகாரம் மிக்க முப்படைகளையும் கட்டுப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இருக்கின்ற நிலையில் அவரின் வாக்குறுதிகளை மீறி கடற்படை காணி பிடிப்பில் ஈடுபடுகிறதா .
வலி வடக்கு தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் புதிய கட்டுமானங்களை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஆகவே தமிழ் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். பெளத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் என்றைக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வராது என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
வழக்கை வாதாட அழைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தி; 5000 ரூபாய் வழங்கியதாகவும் வாக்குமூலம்

வழக்கை வாதாட அழைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தி; 5000 ரூபாய் வழங்கியதாகவும் வாக்குமூலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.