புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹீஆஷியாங்க்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான ஒரு சுமூகமான சந்திப்பு புதன்கிழமை (9) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர் .







