சுமார் 20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சேவைக்கால கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த திட்டத்திற்காக 4.5 பில்லியன் ரூபா, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனத்தின் தலைவர் கலாநிதி சிசிர ரணதுங்க தெரிவித்துள்ளார்.








