சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வருடாந்திர அல்லது ஓய்வுக்குப் பின்னரான வெளிப்படுத்தல்களை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறுபவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், அவர்களின் தாமதத்திற்கான காரணத்தை விளக்குவதற்கு வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தல்களை உரிய காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு உடனடியாக நிர்வாக அபராதம் விதிக்காமல், முதலில் தாமதத்திற்கான காரணத்தை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அவர்கள் வழங்கும் விளக்கம் மற்றும் தாமதத்திற்கான காரணிகளை பரிசீலித்த பின்னரே, நிர்வாக அபராதம் விதிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை, வெளிப்படுத்தல்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதங்களுக்கு நியாயமான காரணங்கள் உள்ளவர்களுக்கு தமது நிலைப்பாட்டை விளக்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் அமையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.








