இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (16) கைது செய்யப்பட்ட அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளில் கூட்டுத்தாபன ஊழியர்களை முறைக்கேடாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேக நபரை தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டு, அவருக்கு பயணத் தடை விதித்துள்ளார். மேலும், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் வழங்காதிருக்க நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இவ்வழக்கு மீண்டும் டிசம்பர் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.








