Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என மட்டு ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(19) காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டு ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் கிழங்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் யுத்தம் உக்கிரமாக இருந்த வேளையில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணத்திலிருந்து தற்துணிவுடன் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் நிமலராஜன். யாழ்
மாவட்ட செயலகத்திற்கு அண்மையிலுள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளந்தெரியாத
ஆயுததாரிகளால் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு நிமலராஜன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகாளாகியும் இதுவரையில் படுகொலையாளிகளுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

மாறிமாறி ஆட்சிக்குவந்த அரசுகள் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் பாராமுகமாகவேயிருந்துவந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசும் அதேபோக்கில் செயற்பட்டுவருவதாகவும் தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு