ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோதலில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் ருஹூணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பீடத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு குறித்த மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.








