Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட “ஈழத்து சிறை” என்னும் கவிதை நூல்

மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட “ஈழத்து சிறை” என்னும் கவிதை நூல்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் மற்றும் மகுடம் கலை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்ச்சித் தொடர் – 62 இல், கவிஞர் வில்சன் சுதாகரின் “ஈழத்துச் சிறை” எனும் கவிதைத் தொகுப்பு அண்மையில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.

நிகழ்வுக்கு, மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி தலைமையாற்றினார். கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியை திருமதி புளோரன்ஸ் பாரதி கென்னடி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பேராசிரியர் சு. சிவரட்ணம் மற்றும் கலாநிதி பிரியா ஜெகதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய நிகழ்வில், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கப் பொருளாளர் கந்தையா தியாகராஜா தமிழ்த்தாய் வாழ்த்தினை நிகழ்த்தினார். மதுரங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் சதாசிவம் கார்த்தீபன் நூலாசிரியர் அறிமுகத்தையும், கவிஞர் றியாஸ் குரானா நூல் நயவுரையையும் வழங்கினர். மகுடம் வி. மைக்கேல் கொலின் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.

நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் லயன் ஆர். லலித்குமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கலந்து கொண்டோருக்கு சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.

ஏற்புரையும் நன்றியுரையும் நூலாசிரியர் கவிஞர் வில்சன் சுதாகர் வழங்கியதுடன் நிகழ்வின் தொகுப்பை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க துணைப் பொதுச் செயலாளர் இரா. பிரதீஸ்காந் மேற்கொண்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
Next Post
மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத் தோட்டாக்கள் மீட்பு

மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத் தோட்டாக்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு