Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

9 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சுப்பர் பெயார் விற்பனை கண்காட்சி இன்று (24) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவிலுமிருந்து உற்பத்தியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு கண்காட்சி நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் ஆரம்பமான இந்த கண்காட்சியில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விற்பனை கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனிர் உட்பட மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய மட்ட பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்,உதவி திட்டங்கள்,மானிய அடிப்படையான வழங்கல்களை முன்னெடுத்துவரும் நிலையில் அவற்றின் மூலம் பெறப்படும் உற்பத்தி பொருள்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இவ்வாறான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் காண்காட்சிகள் நடாத்தப்பட்டுவருகின்றன.

இதன்மூலம் சிறு உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களுக்கான சந்தைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுடன் நுகர்வோர் குறைந்த விலைகளிலும் சிறந்த சுத்தமான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையிலும் இவ்வாறான கண்காட்சிகள் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த கண்காட்சியில் பெருமளவமான மக்கள் பார்வையிட்டு பொருட்களையும் கொள்வனவுசெய்வதை காணமுடிந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
Next Post
மட்டக்களப்பில் மழையுடன் கடும் காற்று; சில கூரைகள் சேதம்

மட்டக்களப்பில் மழையுடன் கடும் காற்று; சில கூரைகள் சேதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.