ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை நேற்று (26) முற்றுகையிட்ட பொலிசார் பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான நேற்று (26) பிற்பகல் குறித்த பிரதேசத்திலுள்ள ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள கலைமகள் பாடசாலை வீதி அருகில் போதை பொருள் விற்பனை செய்து வந்த வீட்டை பொலிசார் முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதுடைய பெண் வியாபாரியை 5350 மில்லிக்கிராம் ஐஸ் போதைபொருளுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பெண் இன்று (27) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.








