Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் “மோந்தா” புயலாக தீவிரம்; கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் “மோந்தா” புயலாக தீவிரம்; கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது இன்று புயலாக மாற்றமடையும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.

அவரால் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது இன்று அதிகாலை புயலாக மாற்றமடையும்.

இதன் காரணமாக நாளை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று முதல் பரவலாக மழை கிடைக்கும்.

மீண்டும் வடக்கு வங்காள விரிகுடாவில் மியன்மாருக்கு அருகில் எதிர்வரும் 04 ஆம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.

இது மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இதன் நகர்வு திசை, மற்றும் ஏனைய விபரங்களை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறைவான மழையுடன் கூடிய வானிலை நிலவும் வாய்ப்புக்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து “மோந்தா” என்ற புயலாக தீவிரமடைந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 610 கிமீ தொலைவில், நிலை கொண்டுள்ளது.

இந்த நிலை வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை ஒரு புயலாக மேலும் தீவிரமடைந்து நாளை மாலை ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
Next Post
போதைப்பொருட்களை ஒழிக்க மக்கள் உதவியும் அவசியம்; விஜித ஹேரத்

போதைப்பொருட்களை ஒழிக்க மக்கள் உதவியும் அவசியம்; விஜித ஹேரத்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.