Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் பல்கலையின் நூலக கூரையில் ஆயுதங்கள் மீட்பு

யாழ் பல்கலையின் நூலக கூரையில் ஆயுதங்கள் மீட்பு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் அபாயகரமான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் பல்கலையில், பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவின் ஒத்துழைப்புடன் , மகசீன்கள் இரண்டையும் மீட்டதுடன் , அதன் அருகில் சுமார் ஐந்தடி நீளமான வயரையும் மீட்டனர் அதனை அடுத்து கூரைக்குள் மேலும் வெடி பொருட்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் கூரையினுள் மேலும் தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்தனர்.

இதன்போது , ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று , மேலும் இரண்டு மகசீன்கள், மூன்று சிறிய குண்டுகள் , கிளைமோரை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் ரிக்னேட்டர், வயர்கள் மற்றும் காயங்களுக்கான மருந்து பொருட்கள், சேலைன் , பஞ்சு , காயங்களுக்கு கட்டும் பன்டேஜ் , இரத்த கறையுடனான சாரம் உள்ளட்டவை மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் அனைத்தும் , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் , நாளைய தினம் (1) அது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் , அதனை அடுத்து மன்றினால் வழங்கப்படும் கட்டளைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, துப்பாக்கி மகசீன் சுற்றப்பட்டு இருந்த பத்திரிக்கை , சேலைன் போத்தலின் காலாவதி திகதி என்பவற்றின் அடிப்படையில் அவை 2005 ஆம் ஆண்டு கால பகுதியில் கூரைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிற நிலையில் , கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
Next Post
பிள்ளையானை மேலும் 21 நாட்கள் வைத்து விசாரிக்க உத்தரவு

பிள்ளையானை மேலும் 21 நாட்கள் வைத்து விசாரிக்க உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு