ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் சம ஓய்வூதியம் மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்க்கும் கோரிக்கையுடன் இன்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், ஓய்வூதியம் பெறும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
“ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் சம ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்”, “சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 ஆண்டுகள் கடந்துவிட்டன”, “ஓய்வூதிய முரண்பாட்டுக்கு நீதி வேண்டும்” எனும் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்றையதினம் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை சிறப்புக் கவனத்தை ஈர்த்துள்ளது.


















